கடைகள் மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்கள் மீளப் பெறப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 4ஆம் திகதிக்கு முன்னதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள முத்திரை அகற்றப்படாத எரிவாயு கொள்கலன்களே இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.