ஜனாதிபதித் தேர்தலுக்காக 1 கோடியே 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 1,881,129 – கொழும்பு மாவட்டத்தில் 1,765,351 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.