ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (5) இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘ஜி7’ நாடுகளுடனும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ஈரான் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புக்களின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.