கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 2.94 மில்லியன் கடவுசீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வருடத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 42.76 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகையும் மற்றும் கடவு சீட்டு வழங்கல் செயற்பாடும் காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த ஆண்டில் 28.1 பில்லியன் ரூபாவை வருமானத்தை இலக்காக கொண்டிருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் ஈட்டிய 23.83 பில்லியன் ரூபாய் வருமானத்தை விட 42.76 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் 910,582 கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 911,689 கடவுச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு பிராந்திய அலுவலகங்கள் 191,557 கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.