வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த விளம்பரத்தில் ராஜா கொல்லுரேயின் புகைப்படத்திற்கு பதிலாக வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான முஹம்மட் முஸம்மிலின் புகைப்படத்தை தவறுதலாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு தவறுதலாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக வடமேல் மாகாண முன்னாள் ஆளுநரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய ஊவா மாகாண ஆளுநருமான முஹம்மட் முஸம்மிலின் குடும்பத்தினர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தனர்.