அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் சியம்பலாபிட்டிய மற்றும் அரச ஓய்வூதியர்களின் கூட்டு தேசிய அமைப்பின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (02) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கி மூத்த பிரஜைகளின் வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.