follow the truth

follow the truth

April, 27, 2025
Homeவிளையாட்டுஒலிம்பிக் போட்டியில் எழுந்த ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை

ஒலிம்பிக் போட்டியில் எழுந்த ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை

Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் செலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

கெலிஃப் பெண்கள் பிரிவில் விளையாடினாலும் ஆண்கள் போன்ற பலம் கொண்டவர். போட்டி தொடங்கியதும் கெலிஃப் அதிரடி தாக்குதலில் இறங்கினார். இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் முகத்தை நோக்கி வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார். மற்றும் கெலிஃப் கைக்கொடுக்க மறுத்துவிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது கெலிஃப் ஆணா? பெண்ணா? என்ன சந்தேகம் எழும்பியது. அப்போது அறிவிக்கப்படாத பாலின தகுதி பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதனால் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் இடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது. என்னுடைய கண்ணில் ரத்தத்துடன் கடைசி வரைக்கும் சண்டையிட்டேன். என்ன விலை கொடுத்தாவது வெற்றி பெற விரும்பினேன். ஏனென்றால் எனது தந்தைக்காக…” என்றார் இத்தாலி வீராங்கனை கரினி.

கெலிஃப் உயிரியல் ரீதியாக XY குரோமோசோம்களைக் கொண்ட ஒரு ஆண் குத்துச்சண்டை வீரர் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...