எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
இதன்படி, இணைந்து வேட்பாளரை முன்வைத்து நாட்டை வங்குரோத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவின் ஊடாக நாட்டு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்கும் திறனைப் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது மற்றும் கட்சியின் கருத்து அடுத்தவாரம் அறிவிக்கப்படும் எனவும், ராஜபக்சக்களுடன் இணைந்துள்ள எந்தவொரு முகாமுக்கும் தனது மற்றும் கட்சியின் ஆதரவைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தற்போதைய ஜனாதிபதி சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது அவரை ஜனாதிபதியாக வைத்திருக்கும் நபர்களை பொறுத்தே தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.