follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP2'இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்' : முழங்க ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்றார் மசூத் பெசஸ்கியான்

‘இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ : முழங்க ஈரான் ஜனாதிபதியாக பதவியேற்றார் மசூத் பெசஸ்கியான்

Published on

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே 17 ஆம் திகதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் திகதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

பலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவில் காஸாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த ‘பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பின்போது ‘புனித குர்ஆன் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்’ என்று மசூத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...

சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...