follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை

வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை

Published on

எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, ஒரு நாளைக்கு 8 1/2 வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஊழியர்கள் 4 1/2 மணி நேரம் வேலை நேரத்துடன் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த நடவடிக்கை தொழில் -வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை என்பதை விடவும் குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் மாறியுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...