எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு அக்கட்சியின் அரசியல் சபை எடுத்த தீர்மானத்துடன், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என அண்மையில் கூடிய கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானித்த நிலையில், பெரும்பான்மை ஆதரவின்றி ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஷசீந்திர ராஜபக்ஷ, நிபுன ரணவக்க எம்.பி.க்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வலையமைப்பை வரும் நாட்களில் தொடங்குவார்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதோடு, அவர்களும் எதிர்வரும் நாட்களில் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்ததையடுத்து, தேர்தல் களமும் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், தமது பலத்தை வெளிப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பல மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.