follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1சுருண்டது இலங்கை அணி - தொடர் இந்தியாவுக்கு

சுருண்டது இலங்கை அணி – தொடர் இந்தியாவுக்கு

Published on

இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றதன் ஊடாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்திய அணி சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதன்படி, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...