follow the truth

follow the truth

April, 28, 2025
Homeவிளையாட்டு2024 ஒலிம்பிக் - வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற 7 மாத கர்ப்பிணிப்பெண்

2024 ஒலிம்பிக் – வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற 7 மாத கர்ப்பிணிப்பெண்

Published on

பாரீஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பத்துடன் வாள் வீச்சு போட்டியில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ் பங்கேற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் எகிப்து நாட்டவரான நாடா ஹஃபேஸ், வாள் வீச்சு போட்டியில் பங்கேற்ற நிலையில், அமெரிக்காவின் Elizabeth Tartakovskyயை முதல் சுற்றில் வென்றார்.

ஆனால், இரண்டாவது சுற்றில் தென்கொரியாவின் Jeon Hayoungஐ எதிர்த்து போட்டியிட்டபோது, 16ஆவது சுற்றில் தோல்வியடைந்தார்.

போட்டியிலிருந்து வெளியேறிய நாடா ஹஃபேஸ் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்

இந்த போட்டியில் நாங்கள் மூன்று பேர் போட்டியிட்டோம் என்று குறிப்பிட்டுள்ள நாடா, நானும் என் போட்டியாளரும், கூடவே என் வயிற்றிலிருக்கும் என் குழந்தையும் போட்டியிட்டோம் என்று கூறியுள்ளார்.

சாதாரணமாகவே கர்ப்பமாக இருப்பது ஒரு சவால். அதிலும், வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் விளையாடுவது எளிதான விடயமல்ல. ஆகவே, நானும் என் பிள்ளையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டுதான் விளையாடினோம்.

16ஆவது சுற்றுவரை வர முடிந்ததை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்பதை தெரியப்படுத்தவே இந்த செய்தியை எழுதுகிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...