பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.