தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பெருந்தோட்டப் பயிர்களினால் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும். அதன்படி கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 234 மில்லியன் டொலர்கள் வருமானம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெற முடிந்துள்ளது.