சர்வசன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவின் பின்னர், ஆகஸ்ட் 4 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில் யார் என்பது குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
சர்வசன அதிகாரம் கூட்டணி என்பது பல அரசியல் கட்சிகளின் கலவையாகும் என்றும், அதன் தலைவர்களில் ஒருவராவது அல்லது வேறு யாராவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்களா என்பதை எதிர்காலத்தில் பார்க்கலாம் என்றும் உதய கம்மன்பில மேலும் கூறினார்.