ஆரம்பத்திலிருந்தே தமது கட்சியின் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானது எனவும், தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இரவும் இன்று காலையும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் என்பது தேசியத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் எனவும், விருப்பு வெறுப்பு அரசியலால் அதில் செல்வாக்கு செலுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மொட்டின் காம்பினைப் போலவே பூவும் மக்கள் இடமே இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.