follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2பொஹட்டுவ வேட்பாளரை முரசுகள் முழங்க மாபெரும் விழாவில் அறிமுகப்படுத்துவோம்..

பொஹட்டுவ வேட்பாளரை முரசுகள் முழங்க மாபெரும் விழாவில் அறிமுகப்படுத்துவோம்..

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது வைபவம் ஒன்று வைத்து அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் தொகுதி வாரியக் கூட்டங்கள் மற்றும் குழுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக துளிர்விடுதல் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“.. பொஹட்டுவ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும். போட்டியிடும் வேட்பாளர் தனியாக இருக்க மாட்டார். அந்த வேட்பாளருடன், பொஹட்டுவவில் அல்லது எமது முகாமில் உள்ள பொது மக்கள் அபிப்பிராயம் அந்த வேட்பாளரைச் சுற்றி திரண்டிருக்கும். அங்குதான் அது வெற்றி பெறும் தேர்தலாக மாறுகிறது.

அதன்படி, மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்வோம். வேட்பாளர் நியமனம் எங்களின் அடுத்த கட்டம். இது முதல் படி. நாங்கள் போட்டியிடுகிறோம் என்ற தீர்மானத்தினை அறிவித்தோம்.. அதன்பிறகு, வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு வெளிப்படுத்தி, எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வோம். மிகக் குறைந்த நாட்களுக்குள் வேட்பாளர் நியமனம் செய்யப்பட உள்ளார். வழக்கம் போல் வெற்றியை இலக்காக கொண்டு முன்னோக்கி செல்வோம்.

உத்தியோகபூர்வ நியமன விழாவைத் திட்டமிடுவதற்கு நேரம் ஒதுக்குவோம். வேறு எதற்காகவும் அல்ல. அதை ஒரு கவர்ச்சியான வாய்ப்பாக ஆக்க வேண்டும். அதற்காக இந்த சில நாட்களை பயன்படுத்துகிறோம்”  

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...