follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP1பசிலின் திடீர் இந்திய விஜயம் தொடர்பில் கேள்வியெழுப்பிய ரணில் (VIDEO)

பசிலின் திடீர் இந்திய விஜயம் தொடர்பில் கேள்வியெழுப்பிய ரணில் (VIDEO)

Published on

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நிதியமைச்சரின் திடீர் இந்திய விஜயம் கவலையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எந்தவொரு நிதி அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறியதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்கான அனைத்து நிதி விவரங்கள் மற்றும் திட்டங்களை சபையில் முன்வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் நிதி அமைச்சருக்கும் உள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நாட்டின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கான ஆவணம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவுகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி...