எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அம்பாறையில் நடைபெறவிருந்த ஒன்பது நிகழ்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் ஒன்பது ‘பிரபஞ்சம்’ திட்டங்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்தும் பொதுக்கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மௌனம் சாதித்த போதிலும், சஜித் பிரேமதாசவின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த சில நாட்களில் 70 ‘பிரபஞ்சம்’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.