எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி எந்த காரணம் கொண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காது என மஹிந்த குடும்பத்துக்கு நெருக்கமானவரான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை தங்கள் கட்சி கூடி சரியான முடிவை எடுத்து யார் வேட்பாளர் என்பதை அறிவிக்கும் என தெரிவித்துள்ள அவர் வாக்குசீட்டில் கட்டாயம் மொட்டுச் சின்னம் இருக்கும் எனவும் ஆனால் ரணில் பெயர் மொட்டுச் சின்னத்தில் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.