follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP2"மற்றவரின் ஆடையை வாங்கி அணிவது போல நாட்டை ஆள முடியாது"

“மற்றவரின் ஆடையை வாங்கி அணிவது போல நாட்டை ஆள முடியாது”

Published on

இன்று ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைக்கு வலைந்துகொடுக்காத நாடாக இந்த நாடு நிமிர்ந்து நிற்பதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்தார்.

காலி நகர சபை மைதானத்தில் நேற்று(27) நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

” இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்கவே தெரிவாக போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. நாட்டின் தேவைக்காக நாம் பேதங்களை மறந்துவிட்டு இணைந்திருக்கிறோம். நாட்டு மக்கள் பல கஷ்டங்களை அனுபவத்த வேளையில் சிலர் நாட்டை விட்டுச் சென்ற போது, அந்த நேரத்தில் மக்களின் கஷ்டங்களை அறிந்து செயற்பட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மட்டுமே முடிந்தது.

சவால்களை ஏற்றுக்கொள்ளும் முதுகெலும்பு ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவுக்கு இருந்தது. அன்றிலிருந்து புலமைப்பரிசில், காணி உறுதிகள், நிதி நிவாரணங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி மக்களுக்கு வழங்கினார். இன்று டொலர் பெறுமதி குறைந்து நாட்டில் மக்கள் மூச்சு விடும் நிலைமை உருவாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாட்டை வெற்றியை நோக்கி நகர்த்த முடியும் என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

மக்களின் பக்கமிருந்து தீர்மானம் எடுக்கும் தலைவர் நாட்டை ஆளுகிறார் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்த போது மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிடைத்துள்ளார்.

இன்று ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைக்கு வலைந்துகொடுக்காத நாடாக இந்த நாடு நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலைமை தொடர ஜனாதிபதியுடன் கைகோர்த்துகொள்ள வேண்டும். மற்றவரின் ஆடையை வாங்கி அணிவது போல நாட்டை ஆள முடியாது. அச்சமில்லாத ஒரு தலைவராலேயே இந்த நாட்டை ஆள முடியும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு...

டலஸ் அழகப்பெருமவிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்...

இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல்...