follow the truth

follow the truth

September, 8, 2024
Homeலைஃப்ஸ்டைல்டீ குடிக்காவிட்டால் தலைவலி வருமா?

டீ குடிக்காவிட்டால் தலைவலி வருமா?

Published on

இந்தியா, இலங்கையிலும் கூட அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீருவதாக கூறுகிறார்கள்.

இதைப்போல தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வருகிறது என சிலர் கூறுவதையும் காணமுடிகிறது. தேநீருக்கும், தலைவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என நிபுணர்கள் கூறியதாவது..

டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

பொதுவாக தேநீர் என்று சொல்லும் போது இந்தியாவில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே குறிக்கிறோம். ஆனால் இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது.

தலைவலி பிரச்சனைக்கும், தேநீர் அருந்துவதற்கும் இடையே நேரடி ஆதாரம் இல்லை. ஆனால் நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால், நீரேற்றத்திற்கு தேநீர் உதவும் என்று நினைப்பதில் பயன் உள்ளது.

தேநீர் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் நபருக்கு, நபர் மாறுபடும். இஞ்சி டீ ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக தேநீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி, ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வலி மற்றும் அசவுகரியத்தை குறைக்கும். 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன் உள்ளதாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை.

அதே நேரம் தேநீர் தலைவலியை தூண்டும் என்றும் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான டீ அல்லது காபி குடிப்பது தலைவலியை ஏற்படுத்தலாம்.

உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காதலியுடன் நேரம் செலவிட சம்பளத்துடன் விடுமுறை

தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனம், ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை சந்தோஷப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. ஊழியர்கள், காதலியுடன்...

சாப்பிடும் போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..

தற்போதைய நவீன உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் புற்றுநோய்...

வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை

தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க,...