போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.
நீதி நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைதுகளை தடுக்கவும் பலர் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் ‘யுக்திய’ திட்டம் நிறுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.