follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் என எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...