தரமற்ற தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஔடத விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்கவை உரிய பிணை நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றினால் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு விடுக்கப்பட்டுள்ளது.