பாகிஸ்தான் – சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல – கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன .
அவரது சரீரத்தை ஏந்நிய விமானம் நேற்று மாலை 5.5 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து சரீரம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 25,000,000 ரூபாவை நிவாரணமாக வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ,பிரியந்த குமாரவின் சடலம் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.