இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.
அதன்படி, சர்வதேச போட்டிகளில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினால், பச்சை குத்திக்கொள்வது, நெக்லஸ்கள் மற்றும் காதணிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முடியை ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சனத் ஜயசூரிய தற்காலிகமாக பயிற்சியாளராக இருந்தாலும், தேசிய வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் பாடசாலை விளையாட்டு வீரர்களும் இருப்பதாகவும், எனவே இலங்கை அணி ஒழுக்கத்துடன் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
“நாங்கள் பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிய விஷயங்களை கூட ஒழுங்காக செய்ய வேண்டும். தற்போது சர்வதேச போட்டிகளுக்கு வரும்போது முடி, காதணி, டாட்டூ போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளோம்..”