follow the truth

follow the truth

April, 28, 2025
Homeவிளையாட்டுவலைப்பந்தாட்ட தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

வலைப்பந்தாட்ட தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

Published on

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் நாளை (ஜூலை 25) நடைபெறவிருந்த நிலையில் வலைப்பந்தாட்ட தேர்தல் குழுவினால் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க தலைமையிலான உத்தியோகபூர்வ தெரிவுக்குழு இதனை விசேட கடிதம் மூலம் வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலை சவால் செய்து பல தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்ற விண்ணப்ப எண். 468/2024 தாக்கல் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கும் வரை, குறித்த உத்தியோகபூர்வ தேர்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வலைப்பந்தாட்டத் தேர்தல் குழு பத்து மாவட்டச் சங்கங்கள் மற்றும் உப சங்கங்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் செயற்பட்டதால் வாக்குரிமையை இழந்த சங்கங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியை நாடியது.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இதுவரை வழங்காததால், தேர்தலை மீண்டும் ஒருமுறை தேர்தல் குழு ஒத்திவைக்க வேண்டியுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கடந்த மே மாதம் 30ஆம் திகதி நடைபெற்றது.

மே 29ஆம் திகதி, வாக்களிக்கத் தயாராக இருந்த யாழ் மற்றும் கொழும்பு மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கங்களின் வாக்குரிமை நீக்கம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை ஆராய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...