பங்களாதேஷில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று(23) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ராஜிகா விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பங்களாதேஷில் 2,835 இலங்கையர்கள் தொழில் மற்றும் தொழிற் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அங்கு கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான எண்ணிக்கையை உடனடியாக தெரிவிக்க முடியாது.
எவ்வாறெனினும், அந்த நாட்டிலுள்ள இலங்கை தூதுவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்குள்ள நிலவரம் தொடர்பாக கேட்டறிந்து வருகிறோம். அவர் வழங்கிய தகவல்களின்படி இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.