தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மற்றும் திகதியை தீர்மானிப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் முதன்மையாக நடத்தப்படவுள்ளதுடன், அதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.