தற்போது ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களைச் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் தென்மேற்கு ஆசிய பணிப்பாளர் மற்றும் அதன் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.