தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பில் 7 சிவில் சமூக பிரதிநிதிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது எனும் பிராதான நோக்குடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் இணக்கம் கண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.