ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றின்போது குறித்த கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.