கீரி சம்பா விலையை மாபியா கட்டுப்படுத்திவருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது நெல் அறுவடை கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லின் விலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்தார்.
அதற்கமைவாக நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா முதலான நெல் கொள்முதல் சம விலையில் இடம்பெறுவதாகவும் , கீரி சம்பா, சம்பா நெல் கொள்வனவு ரூபா 110க்கும் 109க்கும் இடையில் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு விளக்கமளிக்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், சந்தையில் கீரி சம்பா அரிசியின் விலை இன்னும் ரூ. 350க்கு மேல் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
சந்தையில் ஒரு கிலோ கீரி சம்பா விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலையாக 260 ரூபா கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் ,அதன் பலன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.