முன்னர் திட்டமிட்டபடி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.