follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1அரசியலமைப்புத் திருத்தம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்

Published on

சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை கே.என்.சொக்ஸி போன்ற சட்டத்தரணிகளுடனேயே முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை இன்று (19) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

காலி பிரதேச மக்களின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கில் 1600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய நீதிமன்ற வளாகத்தில், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம், இரண்டு மேல் நீதிமன்றங்கள், மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், இரண்டு நீதவான் நீதிமன்றங்கள் உள்ளன.

காலியை சுற்றுலா வலயமாக மாற்றும் போது இப்பகுதியில் பாரிய ஹோட்டல்களை கட்டமைக்க வேண்டிய இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். போக்குவரத்துச் சபை, மரக் கூட்டுத்தாபனம், மஹாமோதர வைத்தியசாலை, தாதியர் கல்லூரி, சிறைச்சாலை, தபால் நிலையம் என்பவற்றை நகர மத்தியில் கொண்டுச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹிக்கடுவ பிரதேசத்தில் இதுபோன்றதொரு நீதிமன்றக் கட்டிடத்தை நிர்மாணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எமக்கு விவாதிக்கலாம். ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என பிரதம நீதியரசர் தரப்பும், உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளன. அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

2015 ஆம் ஆண்டில் நாம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்தோம். நான் வழக்கமாக இத்தகைய பணிகளை கே. என். சொக்ஸி சட்டத்தரணிக்கே வழங்குவேன். ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லாத காரணத்தால் சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது.

அவருக்கு ஒரு வாக்கியத்தை நீக்க முடியவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கிறது. அதற்காகத்தான் இந்த அலறல். இது அவரது கவனக்குறைவாக இருக்கலாம். அந்த தவறிற்கு நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். அதுபற்றி மேற்கொண்டு கருத்துக் கூற வேண்டிய அவசியமில்லை. எனவே, இது குறித்து பயப்பட வேண்டாம். நமது நாடு 1931 முதல் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறது.

மேலும், இந்தக் காலி வரலாற்றின் பாரம்பரியம் குறித்து ஒரு புத்தகம் தொகுக்கப்படும் என்றால், அதற்கான பணத்தை அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவிக்கிறேன்.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...

பியூமியிடம் மீண்டும் விசாரணை

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம்...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...