மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2021-ம் ஆண்டு, பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் தன் எக்ஸ் பக்கத்தில், தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
‘ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் மட்டுமே உள்ளீர்கள். என்னால் உன்னைப் பார்க்கவே முடியவில்லை” எனக் கேலி செய்யும் விதமாகப் பதிவிட்டிருக்கிறார்.
இந்த கருத்து தொடர்பாக இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்த பத்திரிகையாளர் மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், சமூக ஊடகப் பதிவில் கேலி செய்ததற்காகப் பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ்க்கு மிலான் நீதிமன்றம் தற்போது 5,000 யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.