முழுமையான உற்பத்தி, இறக்குமதி மற்றும் உச்சமயமான விநியோகத்தின் மூலம் தங்குதடையின்றிய வழங்கல் நேர்மறையான முடிவுகளை அறுவடை செய்துள்ளது
பல வாரங்களாக உச்சமயமான விநியோக வழிமுறைகளுடன் அதிகபட்ச உற்பத்தி திறனுடன் இயங்கி வரும் INSEE Cement, உள்ளூர் சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டைத்
தணிக்க வெற்றிகரமாக உதவியுள்ளது. INSEE Cement நிறுவனத்தின் முடுக்கி விடப்பட்ட மற்றும் உடனடி தற்காலிக ஏற்பாட்டு நடவடிக்கைகள், பற்றாக்குறையின்
தொடக்கத்திலிருந்தே அதன் முழுச் செயல்பாட்டிலும் தங்குதடையின்றி சந்தை விநியோகத்தை
உறுதிசெய்தது.
அதே நேரத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 700,000 மெட்ரிக் தொன் உற்பத்தியையும் அது பதிவு செய்துள்ளது.
“இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர் என்ற வகையில், உள்ளூர் கட்டுமானத்துறையின் கொவிட்-19 க்குப் பிந்தைய மறுமலர்ச்சி தொடர்ந்து அதன் பாதையில் முன்கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பை INSEE Cement
ஏற்றுக்கொண்டது என INSEE Cement Sri Lanka நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ அவர்கள் குறிப்பிட்டார்.
“முதலில் சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கு நாங்கள் அரசாங்க விதிமுறைகள் மற்றும் தொழில்துறை
கொள்கைகளுக்கு முழுமையாக ஆதரவளித்து வந்தோம். அத்துடன், நாடு முழுவதும் தங்குதடையில்லா விநியோகத்தை உறுதிசெய்ய நாடு முழுவதும் உள்ள எமது விநியோகம்
மற்றும் முகவராண்மை வலையமைப்பைப் பயன்படுத்த முடிந்தது. எங்கள் வாடிக்கையாளர்களின் விசுவாசமும் பொறுமையும் இச்சவாலை சமாளிக்க எங்களுக்கு
கூடுதல் ஊக்கத்தை அளித்தது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
INSEE Cement நிறுவனம் 3.6 மெட்ரிக் தொன் உச்சபட்ச கொள்ளளவில் இயங்குகின்றது.
காலி உற்பத்தி ஆலையில் 1.5 மெட்ரிக் தொன் உற்பத்தியையும், புத்தளம் உற்பத்திஆலையிலிருந்து 1.3 மெட்ரிக் தொன் உற்பத்தியையும், கொழும்பு சீமெந்து முனையத்தில் 0.8 மெட்ரிக் தொன் இறக்குமதித் திறனையும் கொண்டுள்ளது. பற்றாக்குறையைத் தணிக்க, உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சிகளை விரைவுபடுத்துவதற்காக அதன் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு மேலும் இரண்டு கூடுதல் இறக்குமதி
கப்பல்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.