follow the truth

follow the truth

September, 2, 2024
Homeஉள்நாடுகுடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம்

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம்

Published on

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இது ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட திகதி மற்றும் நேரத்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் பொலிஸாருக்கும் கலகத் தடுப்புப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

38 நாடுகளுக்கு இலவச விசா வசதி

சிங்கப்பூர் அமுல்படுத்திய 'one-chop' முறையைத் தொடர்ந்து 38 நாடுகளுக்கான விசா கட்டணத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம்...

வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது...

சென்னை – யாழ் இடையில் மேலும் ஒரு புதிய விமான சேவை

சென்னைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று(01) முதல் ஆரம்பமாகியுள்ளது. சென்னையில் இருந்து...