இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.
இலங்கை வந்திருந்த சுங்கப் பொதுநிர்வாக (Vice Minister of General Administration of Customs) பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjung) உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்படி, இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சீன சந்தைக்கு கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.