சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று (18) கருத்து தெரிவித்திருந்தார்.
கிளப் வசந்தவுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களும் வெளியாகின.
அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்;
“.. தற்போது எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி அவர் இறக்கும் போது நாலாபுறமும் கடனில் சிக்கி கையில் பணமில்லாமல் இருந்தவர் என்பது போன்ற தகவல்கள் எங்களின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது..”
“கஞ்சிபானி இம்ரானும் கணேமுல்ல சஞ்சீவவும் எப்படி தப்பித்தார்கள் என்பதை சட்டத்தரணிகள் நன்றாக சொல்லலாம். ஏனென்றால் அந்த சட்டத்தரணிகள் தான் அவர்களை தப்பிக்க வைத்தனர். அவர்களை நீதிமன்றில் இருந்து அழைத்து சென்றவர்கள் அவர்கள் தானே.. இப்போது கைது செய்தால் அதனையும் சோடித்து கூறுகின்றனர். அவர்களை அழைத்து சென்று கப்பலில் அனுப்பினர்… எல்லாமே நல்லாத்தான் இருக்குது.. அதனால் தான் சொல்லுறேன் போதைப்பொருள் பணத்தை நம்பியிருக்கும் சட்டத்தரணிகள் குழுவொன்று உள்ளது..”