பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.
50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கபிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4 வருட கடூழிய சிறைத்தண்டனை என்ற தீர்ப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என சட்டத்தரணிகள் கருதுகின்றனர்.
காரணம் அவர் ஏற்கனவே தாக்கல் செய்த பிணைமனு மீதான விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஒரு வேலை ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டால் அவர் பிணையில் விடுதலை செய்யப்படலாம்.
ஒரு வேலை அந்த மேன்முறையீட்டு மனு விசாரணையில் ஞானசார தேரருக்கு பிணை மறுக்கப்பட்டால் 2024-03-28 ஆம் திகதியில் இருந்து 2024-07-18 அவர் அனுபவித்த சிறைத்தண்டனை காலம் கழிக்கப்பட்டு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்த சீராய்வு மனு (ரிவிஷன் பெட்டிஷன்) மீதான விசாரணையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.