follow the truth

follow the truth

April, 19, 2025
Homeலைஃப்ஸ்டைல்கட்டாயம் சிரிக்க வேண்டும் - ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

கட்டாயம் சிரிக்க வேண்டும் – ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்

Published on

மக்கள் பதற்றம், மன அழுத்தத்திலிருந்து விடுபட புதிய சட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானின் யமகடா மாகாணம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது. உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகமாகச் சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யமகட்டா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. மன இறுக்கத்தைச் சிரிப்புப் பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானின் இந்தச் சிரிப்புச் சட்டம் தனிமனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இதயப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சிலரால் மருத்துவக் காரணங்களால் சிரிக்க முடியாமல் போகலாம். அவ்வாறான சூழலில் இச்சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்திவருகின்றனர்.

வேலை செய்யும் இடங்களிலும் சிரிப்பு நிறைந்த சூழலை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாளை “சிரிப்பு தினமாக” கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

“சிரிப்பதா வேண்டாமா என்பது அரசியல் சாசனத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை” என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியீடு

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9' திரைப்படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்...

எலும்பை பாதிக்கும் உணவுகள் சில..

எலும்பை பாதிக்கும் உணவுகள் குறித்து இன்று நாம் அலசுவோம்..  சோடா பானங்கள்: செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை...

மாதவிடாய் பிரச்சனையா..? இனி கவலைய விடுங்க…

மாதவிடாய் பிரச்சனை என்பது இன்று பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது. சிலருக்கு மாதவிடாய் வராமல் தள்ளிப் போய்கொண்டே இருக்கும். வேறுசிலருக்கு மாதவிடாயின்...