follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP3ஓமானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

ஓமானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Published on

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று(16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் காவல்துறையினரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என...

மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. WTI வகை மசகு...

மாடியில் இருந்து குதித்த சிறுவன் – ஒருவர் கைது

வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் 12 வயது சிறுவன்...