follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP21350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்

1350 ரூபா சம்பள முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்

Published on

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக ரூ.1350 சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காது தான்தோன்றித்தனமாக கம்பனிகள் செயல்படுவதுடன், 1200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் ரூ.150 கொடுப்பனவுடன் 1350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என கூறுகின்றன.

கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் என இ.தொ.காவின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...