தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அரசாங்க அச்சகத் திணைக்களம் மற்றும் காவல்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுக்குமாறு அதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.