கிளப் வசந்த கொல்லப்பட்டதையடுத்து தற்போது இரு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் சுவரொட்டி யுத்தம் மூன்றாம் தரப்பினரின் அற்பமானது என சமூக செயற்பாட்டாளரான புதிய சுதந்திர கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற போது, பாதாள உலகக் குழுவின் முன்னாள் தலைவர் மதுஷின் கல்லறைக்கு அருகே, நாம் ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறோம் நாம் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கு எதிர் தாக்குதலாக, தெமட்டகொட மஹரகம உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் (14) சில தரப்பினர் சில சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கிளப் வசந்தவின் மனைவி உள்ள மருத்துவமனைக்கு மலர்வளையம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் யூடியூப் சேனல் உடன் உரையாடிய ஓஷல ஹேரத் கூறுகையில், இந்த மாதிரியான கொலையை திட்டமிட்டு, மலர்மாலை அனுப்பி, சுவரொட்டிகளை ஒட்டும் வல்லமை படைத்த கஞ்சிபானி இம்ரான், வீடியோ தொழில்நுட்பம் மூலம் அனைவரையும் அழைத்து ஒரு செய்தியை அனுப்பாதது ஆச்சரியமாக உள்ளது.
எனவே இவ்வாறான அனைத்துச் சூழலையும் கருத்திற் கொண்டு பாதாள உலகக் கும்பலுக்கும் தொடர்பில்லாத வேறு ஒரு தரப்பினரால் இந்த பயங்கரவாதத்திற்கு வித்திடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்த சம்பவத்தின் உண்மையான மூளையாக மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிசார் பிடிப்பார்கள் என்றும் இல்லையெனில் இந்த தொடர் சம்பவத்தின் கீழ் மேலும் ஒரு பாரதூரமான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.