உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ. நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு 6 வருடங்கள் கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார்.