follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1மின் கட்டணத்தில் மாற்றம்

மின் கட்டணத்தில் மாற்றம்

Published on

நாளை(16) முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்டு பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன், ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மதஸ்தலங்களுக்கான மின்சார கட்டணங்களை 30 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...